சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சென்னையில் மீண்டும் அதிகாலை முதல் மழை! 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. 

News image

மழையில் குடை பிடித்தப்படி பள்ளிச் செல்லும் மாணவிகள்.

Updated On :25 நவம்பர் 2021, 3:11 am

DIN


சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. 

இதையும் படிக்க | நகா்ப்புற ரேஷன் கடைகளில் தக்காளி, காய்கறிகள் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு
தாம்பரம், பல்லாவரம், கிண்டி, போரூர், பெருங்களத்தூர், வேளச்சேரி, அடையார், நுங்கம்பாக்கம், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. 

மாநகரில் மீண்டும் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.