தருமபுரி: தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.
_.jpeg)
இத் திருக்கோயிலில், காலபைரவர் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், குபேர யாகம் மற்றும் 64 வகையான அபிஷேகம், 28 ஆகம பூஜைகள், 1008 அர்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்திலிருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் பைரவரை வழிபட்டனர்.
இதையும் படிக்கலாமே.. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

இதேபோல, கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள், சாம்பல் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். கரோனா பரவலை தடுப்பு விதிமுறைகளையொட்டி கோயில் பிராகரத்தை வலம் வர பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிக்கலாமே.. தக்காளி வாங்கும்போது கண்ணீர் வந்ததா? காரணம் இவர்களில்லை

இதைத் தொடர்ந்து மாலையில் காலபரைவர் திருவீதி உலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






