சென்னை: திரைப்படத்துறை குறித்த தேவையற்ற விமர்சனங்களை, கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் படம் வெளியானது. இது குறித்து பல தரப்பினரிடையே விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் வெளியானது. மாநாடு திரைப்படம் வன்முறையை தூண்டும் படமாக உள்ளது. அதனை தடை செய்ய வேண்டும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகள் திரைத்துறை குறித்த தேவையற்ற விமர்சனங்கள், கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திரைப்படத்துறை குறித்த தேவையற்ற விமர்சனங்கள், கருத்துக்கள் தெரிவிப்பதை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும். கட்சியில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் கூறும் கருத்து நம் கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எதற்காக பேச வேண்டுமோ அப்போது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம். அதேநேரத்தில் வரலாற்று படங்களில் உண்மைக்கு புறம்பான கருத்து வந்தால் மக்களுக்கு எடுத்துரைப்பதில் தவறில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவமனைகளில் நிலவும் குறைகளைக் களைய 50 நோடல் அதிகாரிகள் நியமனம்!

இயக்குநர், ஒளிப்பதிவாளர் செழியன் மறைவு: இயக்குநர் சசி அஞ்சலி!
தமிழகத்தைவிட்டு விலகுகிறதா ஹூண்டாய்? முதலீட்டை உறுதிசெய்ய தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

திருப்பூர்: ஊத்துக்குளி அருகே கார் டேங்கர் லாரி மோதி 6 பேர் பலி!
விடியோக்கள்

இயக்குநர் மிஷ்கினின் Train பட டீசர்! | Cinema Updates | Dinamani Talkies
Idhayam Murali - Review | Dinamani Talkies | Atharvaa | Fahadh Faasil | Preity | Kayadu |
கரூர் மக்கள் சந்திப்பு: Vijay Full Speech! | TVK



