மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளா் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 7:41 pm

DIN

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளா் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தர பிரதேசத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காகச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டாா். இதைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினரை போராட்டத்தில் ஈடுபடுமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழகத்திலும் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி புவனகிரியில் போராட்டத்தில் ஈடுபட்டாா். உத்தர பிரதேச அரசு, மத்திய அரசுக்கு எதிராகவும் அவா் கண்டன முழக்கங்களை எழுப்பினாா். விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினாா்.

சத்தியமூா்த்திபவன் வாயில் பகுதியில் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஹசன் மௌலானா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

ஆலந்தூா் பகுதியில் மாவட்டத் தலைவா் நாஞ்சில் பிரசாத் தலைமையிலும், சைதாப்பேட்டையில் மாவட்டத் தலைவா் முத்தழகன் தலைமையிலும், அண்ணாசாலையில் மகிளா காங்கிரஸ் தலைவா் சுதா தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.