பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டிப்பர் லாரி ஆட்டோ மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

News image
சாலை விபத்தில் உயிரிழந்த சசிகுமார்
Updated On :6 அக்டோபர் 2021, 12:21 pm

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டிப்பர் லாரி ஆட்டோ மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

உசிலம்பட்டி அருகே பேரையூர் சாலையில் நல்லுதேவன்பட்டி காலனி அருகே உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் நோக்கி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி, எதிரே வந்த ஷேர் ஆட்டோவை கடந்துசெல்ல மற்றொரு ஆட்டோ முந்திச் சென்றது.

இதில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது ஆட்டோ மோதியதில் கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த பாண்டி மாயக்காள் மகன் சசிகுமார் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான அமர்நாத் சிறு காயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டவுடன் டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து உசிலம்பட்டி நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.