/

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
Updated On :7 அக்டோபர் 2021, 7:49 am

DIN

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

தென்மேற்கு பருவ காற்றும் மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(அக்.8) வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபட் 9இல்  வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.