சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 14-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னை கோப்பை வெல்வது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன் 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் சென்னை சாம்பியனாகியுள்ளது. கடந்த சீசனில் மிக மோசமான வகையில் தோற்ற நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது சாம்பியனாகி சாதித்திருக்கிறது சென்னை.
துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்களே அடித்து வீழ்ந்தது. சென்னை தரப்பில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்தாா். கொல்கத்தா பௌலா்களில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இதையும் படிக்க- 'வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டதே வெற்றிக்கு காரணம்'
கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயா் மட்டும் ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் ஸ்கோா் செய்யாமலே அடுத்தடுத்து வீழ்ந்தன. ஷா்துல் 3 விக்கெட் சாய்த்து அசத்தினாா். டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் ஆனாா். இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது சுட்டுரையில், சிஎஸ்கே அற்புதமாக செயல்பட்டது. மன்னர்கள் மீண்டும் கர்ஜித்தனர். நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஒவ்வொரு சிஎஸ்கே வீரர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இதயம் முரளி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பொருந்தும்: உச்சநீதிமன்றம்

இந்திய அளவில் ரூ. 300 கோடி வசூலித்த ஸ்பைடர் மேன் திரைப்படம்!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



