சங்ககிரி: அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி, வட்ராம்பாளையம் கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டினர்.
அதிமுகவை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50-வது ஆண்டு அக்டோபர் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதையொட்டி சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காவேரிப்பட்டி ஊராட்சி, வட்ராம்பாளையம் கிராமத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவரும், அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணியின் மாவட்டச் செயலருமான ஏ.பி.சிவக்குமாரன் தலைமையில் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர்.
_.jpeg)
அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்குகிறார் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன்.
பின்னர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தலைமையில் நிர்வாகிகள் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். நிர்வாகிகள் பழனிசாமி, நடேசன், மணி, கண்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
மேற்காசிய பதற்றம்: வளைகுடாவிலிருந்து இரு வாரங்களில் 2 லட்சம் பயணிகள் தாயகம் திரும்பினர்!

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

