மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொன் விழா கொண்டாட்டம்

கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொன்விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 7:23 am

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொன்விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அதிமுக பொன்விழாவையொட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் கட்சிக் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் டி.ஏழுமலை, சக்கரை, கே.குருமூர்த்தி, மனோஜ், வெங்கடேசன், சரவணன், சுதாகர், சத்யாசங்கர், கோபி கிருஷ்ணன், ரகு, புருஷோத்தமன், மகேந்திரன், வளையாபதி, ராகவன், அருள், அறிவழகன், பொன்னரசு, நேதாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி நகர அதிமுக சார்பில் கோட்டக்கரை எம்ஜிஆர் சிலை முன்பு நடைபெற்ற அதிமுக பொன்விழா கொண்டாட்டத்திற்கு நகரச் செயலாளர் மு.சேகர் தலைமை தாங்கினார்.

Story image

நிகழ்வில் அவைத் தலைவர் கோவிந்தராஜன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு மாவட்டச் செயலாளர் ஏ.சிராஜுதின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் இமயம் மனோஜ், ஓடை ராஜேந்திரன், எம்ஜிஆர் அணி துணைச் செயலாளர் எம்.கேசவன், கே.லட்சுமணன், கே.உதயகுமார், அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட இணை செயலாளர் அப்துல்கறீம், பாசறை நகரச் செயலாளர் சரவணன், வரதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து அதிமுகவினர் கட்சி கொடியேற்றி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அவ்வாறே எகுமதுரையில் அதிமுக இளம்பெண் இளைஞர் பாசறை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் டி.சி.மகேந்திரன் தலைமையிலும், சிப்காட்டில் அதிமுக நிர்வாகி பக்கீர் முகம்மது தலைமையிலும் அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.