ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், இன்று புதன்கிழமை பதவியேற்பார்கள் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!
Updated on
1 min read


சென்னை: தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், இன்று புதன்கிழமை பதவியேற்பார்கள் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. 

இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய மொத்தம் 22 ஆயிரத்து 581 பதவியிடங்களில் போட்டியின்றி மற்றும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. அவர்கள் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 22 ஆயிரத்து 581 பதவியிடங்களில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இன்று பதவியேற்க உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com