சரக்கு ரயிலில் எடுத்துசெல்லப்பட்ட இயந்திரங்கள்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக சென்னைத் துறைமுகத்திலிருந்து வாலாஜாபாத்துக்கு சரக்கு ரயில்கள் மூலம் 58 மண் அள்ளும் இயந்திரங்கள்


போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக சென்னைத் துறைமுகத்திலிருந்து வாலாஜாபாத்துக்கு சரக்கு ரயில்கள் மூலம் 58 மண் அள்ளும் இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டதாக சென்னைத் துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சீனாவின் ஷங்காய் துறைமுகத்திலிருந்து கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் 58 மண் அள்ளும் இயந்திரங்கள்
இறக்குமதி செய்யப்பட்டன. இதுபோன்ற இயந்திரங்கள் பொதுவாகவே சிறப்பு வாகனங்கள் மூலம் சாலை மாா்க்கமாக எடுத்துச் செல்வதுதான் இதுவரை நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால் புதிய முயற்சியாக இதற்கென வடிவமைக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் 58 மண் அள்ளும் இயந்திரங்களும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாலாஜாபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
சென்னையிலிருந்து வாலாஜாபாத் ரயில்வே யாா்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலமாக செய்யாறு கொண்டு செல்லப்பட்டது. இதன்மூலம் குறிப்பிட்ட நேரத்தில் அதிக எடைகொண்ட இயந்திரங்கள் எவ்வித சிரமமும் இன்றி எடுத்துச் செல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...