பொதுத்துறை நிறுவன சொத்துக்களை மத்திய அரசு விற்கக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவன சொத்துக்களை மத்திய அரசு விற்கக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
பொதுத்துறை நிறுவன சொத்துக்களை மத்திய அரசு விற்கக்கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்


சென்னை: பொதுத்துறை நிறுவன சொத்துக்களை மத்திய அரசு விற்கக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 

இதில், விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுத்துறை நிறுவனங்கள் அனைவருடைய சொத்தாகும். பொதுச்சொத்துக்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல. பொதுச்சொத்துக்களை விற்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமர் மோடி கடிதம் எழுத உள்ளேன்.

1987 ஆம் ஆண்டு இடஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதி போராளிகளுக்கு விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும்  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com