சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி செலுத்தினார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ப.விஜயலெட்சுமி உடலுக்கு இயக்குநர் பாரதிராஜா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

Published On :



அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அஞ்சலி செலுத்தினார். 

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இதனிடையே விஜயலட்சுமியின் உடல் ஒ.பி.எஸ்.யின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, விஜயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். 

இதேப் போன்று தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் விஜயலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் தெரிவித்தனர். 

Story image

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ப.விஜயலெட்சுமி உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பி.பெரியசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.