மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாராலிம்பிக்: இறகுப்பந்துப் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோ பாராலிம்பிக் இறகுப்பந்துப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். 

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 3:17 pm

DIN

டோக்கியோ பாராலிம்பிக் இறகுப்பந்துப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாராலிம்பிக்சில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்டுள்ள இறகுப்பந்துப் போட்டியில் நமது வீரர்கள் பிரமோத் பகத்தும் மனோஜ் சர்க்காரும் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு எனது பாராட்டுகளையும்; அடுத்ததாக கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியிலும் விளையாட இருக்கும் பிரமோத் பகத்துக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.