ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1.71 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,670 கன அடியிலிருந்து 22,875கன அடியாக அதிகரித்து

News image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின்அளவு வினாடிக்கு 22,875 கன அடியாக அதிகரித்தது. 

Updated On :5 செப்டம்பர் 2021, 4:09 am

DIN

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,670 கன அடியிலிருந்து 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கன அடியாக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு  பரவலாக மழை பெய்து வருகிறது.  கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,670 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 22,875 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் சனிக்கிழமை காலை 69.39 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 71.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.71அடி உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.65 டி.எம்.சியாக இருந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.