இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தமிழகத்தில் 2வது நாளாக கரோனா அதிகரிப்பு: இன்று 1,596 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 21 பேர் பலியாகினர்.

News image
தமிழகத்தில் 3வது நாளாக கரோனாஅதிகரிப்பு
Updated On :9 செப்டம்பர் 2021, 1:16 pm

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,596 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 21 பேர் பலியாகினர்.

தமிழகத்தில் நேற்று 1,587 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,596 பேராக உயர்ந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வியாழக்கிழமை (செப்.9) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,596 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,28,961-ஆக உயர்ந்துள்ளது.

இன்று பலி எண்ணிக்கை 21-ஆக குறைந்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,094-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1534 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,77,646-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.