கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் பொறுப்பு: இபிஎஸ்

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
Updated On :13 செப்டம்பர் 2021, 5:36 am

DIN

மாணவர் தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் மாணவர் தனுஷ் தற்கொலைக்கு அரசு உரிய விளக்கம் அளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசியது:

“வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை குறித்தும், சேலம் மாணவர் தனுஷ் தற்கொலை குறித்தும் சட்டப்பேரவையில் பேச முயன்றேன். அதற்கு உரிய பதிலளிக்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம். தனுஷ் தற்கொலைக்கு திமுக அரசுதான் காரணம். நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையால் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா என மாணவர்கள், பெற்றோர் குழப்பமடைந்தனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என கூறியிருந்தனர். இதை நம்பி மாணவர்கள் நீட் தேர்வுக்கு சரியாக தயாராகவில்லை. நீட் தேர்வு பிரச்னையில் அரசு தெளிவான முடிவெடுத்து சொல்லவில்லை.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.