தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி சுமுக முடிவு: திமுக

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி சுமுக முடிவு எடுக்க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களைத் திமுக அறிவுறுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 செப்டம்பர் 2021, 5:45 am

DIN


உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி சுமுக முடிவு எடுக்க மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை திமுக அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்பு இடங்கள் குறித்து பேசி, சுமுக முடிவு செய்ய வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்."

வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதிமுக கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.