எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தமிழகத்தில் புதிதாக 1,658 பேருக்கு கரோனா; 29 பேர் பலி

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 

News image
தமிழகத்தில் புதிதாக 1,658 பேருக்கு கரோனா; 29 பேர் பலி
Updated On :15 செப்டம்பர் 2021, 2:46 pm

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,658 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 29 பேர் பலியாகினர்.

தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,658 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,38,668-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக இன்று பலி எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,246-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து1,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,86,786-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும்  1,50,226 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.