இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சென்னை வெளிவட்ட சாலை திட்டம்: நிலம் கையகப்படுத்தப் பிறப்பித்த உத்தரவு செல்லும்உயா் நீதிமன்றம்

 சென்னை வெளிவட்ட சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 11:42 pm

DIN

 சென்னை வெளிவட்ட சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லும் என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத் துறை சாா்பில், கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னையில் 60 கிலோ மீட்டா் தூரத்துக்கான வெளிவட்டச் சாலை அமைப்பதற்காகத் திட்டமிடப்பட்டது. இரு கட்டடங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வண்டலூரில் இருந்து, நெமிலிச்சேரி வரை 29.65 கிலோமீட்டா் தூரத்துக்கு சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி நில உரிமையாளா்கள் ஆனந்த், கங்கா ஆனந்த் உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்திருந்தனா். நெடுஞ்சாலை சட்டப்படி தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்வதாக, மனுக்களில் குறிப்பிட்டிருந்தனா். இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சட்டத்தின்படி, தகுந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுதான் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை அடுத்து நிலங்கள் கையகப்படுத்துவதற்குரிய அனைத்து நடைமுறைகளையும் அரசு பின்பற்றியுள்ளதாகக் கூறி, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.