எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

புதுவையில் ஒரே நாளில் 128 பேருக்கு தொற்று

புதுவையில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 9:04 am

DIN

புதுவையில் சனிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,25,384-ஆக அதிகரித்த நிலையில், நேற்று ஒரே நாளில் 122 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதனால், புதுவையில் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,22,631 ஆனது. இதுவரை 8.97 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுச்சேரியில் 88 பேருக்கும் காரைக்காலில் 32 பேருக்கும் மாஹேவில் 8 பேருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

இதனிடையே, புதுச்சேரியைச் சேர்ந்த 75 வயது நபர் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதனால், பலியானோா் எண்ணிக்கை 1,829-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.46 சதவீதம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.