/

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை
Updated On :20 செப்டம்பர் 2021, 6:51 am

DIN

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்ட செய்திக்குறிப்பில்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். காடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.21: வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்தமழையும், காடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

செப்.22: வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

செப்.23: டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்.24: டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: 

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.