கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 16,993-ஆக உயா்வு
தமிழகத்தில் தற்போது 16,993 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, மேலும் 1,647 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.


தமிழகத்தில் தற்போது 16,993 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, மேலும் 1,647 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதில் அதிகபட்சமாக கோவையில் 218 பேருக்கும், சென்னையில் 198 பேருக்கும், ஈரோட்டில் 112 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 48,688 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை 1,619 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.96 லட்சத்தைக் கடந்துள்ளது.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 19 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,379-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...