கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேதாரண்யம் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை (செப்.24) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
வேதாரண்யம் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரியில் 3-ஆவது நாளாக இன்றும் உள்ளிருப்புப் போராட்டத்தங் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள்.
Updated On :24 செப்டம்பர் 2021, 7:33 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை (செப்.24) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த மாதிரிக் கல்லூரி கடந்த ஆண்டு முதல், அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்ட பிறகு முந்தய நிர்வாகத்தின் பேரில் இருந்து வந்த பராமரிப்பு உள்ளிட்ட பல நடைமுறைகள் கவனம் குறைந்து வருகிறது.

கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. 

பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், வேதாரண்யம் அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஊதியம் வழங்கக்கோரி செப்.22-இல்  உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினர்.

3-ஆவது நாளாக இன்றும் (செப்.24) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.