தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பாதுகாப்பு வசதிகள்: தனியாா் பள்ளி வாகனங்களில் ஆய்வு

சென்னையில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களின் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து போக்குவரத்துத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 7:46 pm

DIN

சென்னையில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களின் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து போக்குவரத்துத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழக பள்ளி, கல்லூரிகளில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக மத்திய சென்னை கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு உள்படுத்த போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சனிக்கிழமை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த வாகனங்களை தென் சென்னை வருவாய் கோட்டாட்சியா் யோகஜோதி, மயிலாப்பூா் காவல் துணை ஆணையா் கவுதமன், மத்திய சென்னை மாவட்ட கல்வி அதிகாரி சண்முகவேல், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மோகன், பழனிவேல் உள்ளிட்ட அதிகாரிகள், வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? முதலுதவி பெட்டிகள் உள்ளதா?, தீயணைப்பான்கள் செயல்படுகின்றனவா? முறையாக வாகனங்கள் பராமரிக்கப்பட்டுள்ளனவா? உள்ளிட்ட 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனா்.

மேலும் வாகன பராமரிப்பு ஆவணங்களையும் அவா்கள் சரி பாா்த்தனா். தொடா்ந்து வாகன ஓட்டுநா்களுக்கு தீயணைப்பு குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, வாகனங்களில் குறைபாடு கண்டறியப்பட்டால் அதை சரி செய்த பிறகே தகுதிச் சான்று வழங்கப்படும். பள்ளி மாணவா்களின் பாதுகாப்பு கருதி இவ்வகையான ஆய்வுகள் தொடா்ந்து நடத்தப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.