பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

தேக்கடி ஏரியில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

தேக்கடி ஏரியின் கரையோரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேக்கடி ஏரிக்கரை பகுதிகளில் சுற்றித்திரிந்த யானை கூட்டம்.

Published On :28 ஜனவரி 2024, 9:46 am IST

கம்பம்: தேக்கடி ஏரியின் கரையோரப் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள தேக்கடி ஏரி சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது.

கேரள அரசு அறிவித்த பொதுமுடக்க தளர்வுகள் எதிரொலியாக, இடுக்கி மாவட்ட சுற்றுலா தளங்களில் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில், முக்கிய பங்கு வகிப்பது தேக்கடி ஏரியில் படகு சவாரி. தற்போது தேக்கடி ஏரியில் சுற்றுலா பயணிகளுக்காககாலை 7 மணி மற்றும் 11 மணி, பிற்பகல் 1 மணி மற்றும் 3 மணி ஆகிய நேரங்களில் ஐந்து படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

வியாழக்கிழமை காலை சுற்றுலா பயணிகள் தேக்கடி ஏரியில் படகு சவாரி சென்றனர். அப்போது ஏரியின் கரைப் பகுதிகளில் யானை கூட்டம் சுற்றி திரிந்தது. குட்டி மற்றும் பெரிய யானைகள் கூட்டம் கரை பகுதியில் மிக அருகில் இருந்ததால் சுற்றுலா படகு ஓட்டுநர் கரை அருகே கொண்டு சென்று சுற்றுலாப்பயணிகளுக்கு யானை கூட்டத்தை காண்பித்தார்.

இதனால் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் கேமரா மற்றும் செல்லிடப்பேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இதுபற்றி கேரள மாநில சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, காலையில் படகு சவாரி 7 மணி டிரிப்பின் போது வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் ஏரியின் கரைப் பகுதிக்கு வந்து நீர் அருந்தும் படகுச் சவாரியின் முதல் இருப்பின்போது இந்த காட்சிகளை காணலாம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.