அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 3:37 pm

DIN

கூடங்குளம் அணு உலை வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு அணு உலைகள் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. அதை ஒரு அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, மேலும் 4 அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
அணு உலை பூங்காக்களால் உருவாகும் சுற்றுச்சூழல் அபாயம், அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதில் உள்ள நடைமுறை பிரச்னைகள், பெரும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு என பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன.
ரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா உள்ளிட்ட பல்வேறு அணு உலை பூங்காங்களில் ஏற்பட்ட விபத்துக்களின் காரணமாக, ஏராளமான மக்களும் உயிரிழப்புக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த ஆபத்து இங்கும் ஏற்படும் என்பதால் மேலும் அணு உலைகளை அமைக்க வேண்டாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் சார்பில் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேலும் ஒரு இடியாக ஒன்றிய மோடி அரசு அணுக் கழிவுகளை கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே சேமித்து வைப்பதற்கு
ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.
அணுக் கழிவுகளை நிரந்தரமாக கூடங்குளம் வளாகத்திலேயே வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்களிடையே தொடர்ந்து நிலவி வந்துள்ளது. இந்நிலையில், 3, 4 உலைகளுக்காக மற்றொரு அணுக்கழிவு மையத்தை, அந்த வளாகத்திலேயே வைப்பதற்கான அனுமதியை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். 

முதல் அணு உலைக்கான அணுக்கழிவு மையமே அமைக்க இயலாத நிலையில், இதுகுறித்து தெளிவான முடிவு எதுவும் எடுக்காமல் அணுக்கழிவு மையங்களை வளாகத்திற்குள் அமைப்பது பேராபத்தை ஏற்படுத்தும்.
கதிர்வீச்சு ஆபத்து ஏற்படுத்தும் அணுஉலை பூங்கா அமைக்கும் மத்திய அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதுடன், இதனை உடனடியாக கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.
அணு கதிர்வீச்சால் பேராபத்து ஏற்படும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.