துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல்
துபையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த இருவரால் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


துபையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த இருவரால் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபையிலிருந்து சமீப காலமாக இந்தியாவிற்குள் தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவை விமான நிலையத்தில் 40 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்திருந்த நிலையில் நேற்று (செப்-29) செவ்வாய்க்கிழமை திருச்சி விமான நிலையத்திற்கு துபையிலிருந்து வந்த மாரிமுத்து , இப்ராஹிம் என்கிற இரு பயணிகளை சோதனை செய்த போது இருவரும் 4 கிலோ தங்கத்தை மின்னணு சாதனங்களில் உருக்கி மறைத்துக் கொண்டுவந்தது தெரியவந்தது.
பின் இருவரையும் கைது செய்ததோடு 4 கிலோ தங்கத்தையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.19 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...