தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை ஒசூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற உன்னதமான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். 

News image
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற உன்னதமான திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் .
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:26 am

DIN

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமனப்பள்ளி கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற உன்னதமான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். மேலும் கால்களை இழந்த இரு இளைஞர்களுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தொடக்கி வைத்தார்.

‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தமிழகத்தில் கோவை, மதுரை, நெல்லை, சென்னை, கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் தொடக்கி வைத்துள்ளார். இதன்மூலம் மக்கள் நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் டயாலிசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இந்தத் திட்டம்  இந்த ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்த விழாவில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் ரெட்டி தேஜஸ்வி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் எம்எல்ஏ ஒய் பிரகாஷ், பர்கூர் எம்எல்ஏ மதியழகன், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் முருகன், சத்யா, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.