குண்டா் தடுப்புச் சட்டம்: பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி 'பப்ஜி' மதன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி 'பப்ஜி' மதன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரியான மதன்குமாா், தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூ டியூப் சேனலில் தொடா்ந்து நடத்தி வந்தாா். சிறுவா்கள் பலா் இந்த சேனலில் பப்ஜி விளையாட்டை விளையாடியுள்ளனா். அந்த சேனலில் பெண்கள் குறித்து ஆபாசமாகப் பேசி பதிவுகளை மதன் வெளியிட்டதால் அதிக பணம் கிடைத்தது.
தலைமறைவாக இருந்த மதன், கடந்த ஜூன் 18 -இல் கைது செய்யப்பட்டாா். அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஜூலை 5-இல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளா்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளனா்.
இதையும் படிக்கலாமே- அடுத்த ஒலிம்பிக்ஸ் எங்கு, எப்போது நடைபெறுகிறது?
குண்டா் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடா்பான ஆவணங்கள் தனக்கு முறையாக வழங்கப்படவில்லை என கூறியிருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...