நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :15 டிசம்பர் 2021, 4:34 pm

DIN

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் நைஜீரியாவிலிருந்து வந்த 47 வயதுடையவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். 

மேலும், விமானத்தில் வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்புடைய 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு புதியவகை கரோனா இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றை எண்ணி பதற்றம் அடைவதை விட மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 15 சதவிகிதம் மக்கள் இன்னும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர்.  1,400 மெட்ரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.