ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலம் நினைவூட்டும் திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் மேம்படுத்தும் திட்டத்தை இன்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி

News image
Updated On :17 டிசம்பர் 2021, 12:28 pm

DIN

கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலமாக நினைவூட்டல் மேம்படுத்தும் திட்டத்தை இன்று சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பிறகு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்தொகைக்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வுக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 28 நபர்களுக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அறிகுறி இருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் கரோனோ பரிசோதனை மேற்கொள்ளவும் கட்டாயம் தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளளேன்.
தமிழத்தில் உள்ள 11 லட்சம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களும் மற்றும் 9 லட்சம் குழந்தைகள் இந்த தடுப்பூசி குறித்த குறுஞ்செய்தி திட்டம் மூலம் பயனடைவார்கள் என்றார். இதுபோல முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி தொகை பெறுவதற்கும் இந்த குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
தமிழகத்திற்கு அதிக ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து  வந்த 12,767 பேருக்கும், மற்ற வெளிநாட்டில் இருந்து வந்த 2,101 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தமாக 14,868 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 70 பேருக்கு கரனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு கரோனா மறுஆய்வில் நெகட்டிவ் வந்துள்ளதை அடுத்து 65 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 28 பேருக்கு ‘எஸ்’ வகை மரபு மாற்றம் கண்டறியபட்டு ஒமைக்ரான் வகை கரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ‘எஸ்’ வகை மரபு மாற்றம் கண்டறியப்பட்ட அனைவரது மாதிரிகளும் மரபியல்
பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதில் 10 பேரின் முடிவுகள் வந்துள்ளதாகவும், அதில் 8 பேருக்கு டெல்டா, ஒருவருக்கு ஒமைக்ரான், ஒருவருக்கு என்ன தொற்று என்று உறுதிசெய்யப்படவில்லை. அவருக்கு மட்டும் மறு ஆய்வு செய்யப்படும்.

குறைந்த ஆபத்து உள்ள நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு தான் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றவர், அதிக ஆபத்து உள்ள நாட்டுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் அனைவரும் வீடுகளில் தனிமை படுத்திக்கொண்டு 7 நாட்களுக்கு பின்னர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என உத்தரவு பிறபிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளளேன். மேலும் அவர்கள் அனைவருக்கும் விமானநிலைத்திற்கு வந்தவுடன் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யவும் அனுமதி அளிக்குமாறும் கடிதம் எழுத இருக்கிறேன்.
ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடைய 278 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு
வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் மரு.டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குநர் மரு. நாராயணபாபு,
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் மரு.குருநாதன், சிறப்புப் பணி அலுவலர் - (ஆரம்ப சுகாதார நிலையம்) இயக்குநர் மரு.என்.சித்ரா,
யுனிசெப் முதன்மை அலுவலர் கே.எல்.ராவ், இணை இயக்குநர் மரு.கே.வினய்குமார் மற்றும் அரசு உயரலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.