100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

சென்னை விமான நிலையத்தில் ரூ.61.37 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 1.42 கிலோ தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Published On :

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 1.42 கிலோ தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

துபையிலிருந்து வியாழக்கிழமையன்று (16.12.2021) இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த நான்கு பயணிகளை, விமான நிலைய வெளியேறும் நுழைவாயிலில், சுங்கத்துறை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர். இவர்களது உடல் மற்றும் உடமைகளை சோதனையிட்டதில்,  தங்கத் துகள் வடிவில், அட்டைப்பெட்டிகளில் 1147 கிராம் எடையுள்ள, ரூ.49.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்தப் பயணிகள் நான்கு பேரும், ரூ.42.04 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்களையும் கடத்தி வந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, 4 பயணிகளும் கைது செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், சார்ஜாவிலிருந்து அதேநாளில் வந்த ஒரு பயணியிடம் நடத்திய சோதனையில், ரூ.11.87 லட்சம் மதிப்புள்ள 275 கிராம் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. 

மேலும் அந்தப் பயணி, ரூ.9.80 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்களை கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டு, தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அந்தப் பயணியும் கைது செய்யப்பட்டார். மொத்தத்தில் ரூ.61.37 லட்சம் மதிப்புள்ள 1.42 கிலோ தங்கம் மற்றும் ரூ.51.84 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஐந்த பயணிகளும் கைது செய்யப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.