இந்த நிலையில் வைகோவின் கேள்விகளுக்கு மத்திய எண்ணெய், இயற்கை எரிகாற்றுத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தாலி அளித்த பதில்,
இந்தியன் ஆயில் நிறுவனத்தின், எண்ணுhர்-திருவள்ளூர்-பெங்களூரு-புதுச்சேரி-நாகப்பட்டினம்-மதுரை-தூத்துக்குடி இயற்கை எரிகாற்றுக் குழாய் திட்டத்தின் (ETBNMTL) ஒரு பகுதியான, இராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே, 142 கிலோ மீட்டர் நீளம், 4 MMSCMD திறன் கொண்ட, இயற்கை எரிகாற்றுக் குழாய் திட்டத்தை, 17.02.2021 அன்று, மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இராமநாதபுரம்-தூத்துக்குடி இடையேயான எரிகாற்றுக் குழாய் திட்டத்திற்கான மொத்தச் செலவு மதிப்பு 700 கோடி ரூபாய் ஆகும். 2021-22 ஆம் நிதி ஆண்டிற்கு, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.