படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

இறப்புப் பதிவு முறையை தற்காலிகமாக திருத்தியமைக்க முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை

இறப்புப் பதிவு முறையாக தற்போதைய பேரிடர் காலத்தில் முதல்வர் திருத்தி அமைக்க வேண்டுமென மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

Published On :

இறப்புப் பதிவு முறையாக தற்போதைய பேரிடர் காலத்தில் முதல்வர் திருத்தி அமைக்க வேண்டுமென மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், 

இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பதிய தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்னும் பழைய விதியை இந்த காலத்தில் முதல்வர் அவர்கள் தலையிட்டு திருத்த வேண்டும்.

பேரிடர் காலத்தில் இறப்புகள் அதிகரித்திருக்கிறது. அரசு அலுவலகங்களோ மிகக்குறைந்த ஊழியர்களோடு இயங்குகிறது. இறந்தவர்களைப் பதிய வாழ்கிறவர்கள் படாதபாடு படுகிறார்கள்.

அபராதத் தொகையைவிட கொடியது மண்டல அலுவலகத்துக்கும் வார்டு அலுவலகத்துக்குமான அலைச்சல்.

மரணங்களை சந்தித்துள்ள வீடுகளில் உலராத கண்ணீரோடு மனிதர்கள் தேங்கிக்கிடக்கிறார்கள்.

இறப்புச்சான்றிதழுக்காக அழுதகண்ணீரோடு அலையவிட வேண்டாம்.

எளிய மக்களின் இடரைக் குறைக்க இது மேலும் உதவும் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.