தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது.
Updated On :28 ஜனவரி 2024, 4:31 am

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.64 அடி உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும்மழை காரணமாக நேற்று காலை வினாடிக்கு 15,740 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 87.38 டி.எம்.சி. ஆக உள்ளது. 

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1.64 அடி உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.