தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

வேலூரில் பொதுப்பணித் துறை கட்டட அலுவலகத்தை முதல்வர் திறந்துவைத்தார்

வேலூர் மாவட்டம், காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை அலுவலகக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

Published On :

வேலூர் மாவட்டம், காட்பாடியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுப்பணித் துறை கட்டட (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம் மற்றும் உபகோட்ட அலுவலகக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக முதல்வர் திறந்துவைத்தார். 

இவ்வலுவலகக் கட்டடம் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் மொத்தம் 6,495 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மின் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் சேகரிப்பு வசதி, சுற்றுச்சுவர் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடம்) இரா.விஸ்வநாத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.