எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழகத்தில் புதிதாக 1,467 பேருக்கு கரோனா; 16 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,467 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 16 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :4 அக்டோபர் 2021, 2:53 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,467 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 16 பேர் உயிரிழந்தனர்.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை திங்கள் கிழமை (அக்.4) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,467 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,69,962-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் பலி எண்ணிக்கை 16-ஆக குறைந்துள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,666-ஆக அதிகரித்துள்ளது. 

அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்தனர். 

கரோனாவிலிருந்து 1,559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,17,432-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,48,229 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு...

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 181 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு -103
தஞ்சாவூர் -90
ஈரோடு -88
சேலம் -51
திருச்சி -50

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.