இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பலியான கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் கடந்த திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அதில், எஸ். சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகர் மகன் சுகந்தன் (30), அருளானந்தன் மகன் சேவியர்(32) ஆகிய 3 பேரும் சுமார் 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் செவ்வாய்க்கிழமை காலை மீன்பிடித்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகை மோதியதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் மீனவர் ராஜ்கிரண் குடும்பத்துக்கு முதல்வர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்காசிய போா் எதிரொலி: உள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தி ஒதுக்கீடுக்கான முன்னுரிமைப் பட்டியல் மாற்றியமைப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!

மேட்டூர் அணை நிலவரம்!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

