கோயில்களின் முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க நடவடிக்கை: தமிழக அரசு

கடந்த ஆண்டைப் போல கோயில்களின் முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த ஆண்டைப் போல கோயில்களின் முன் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி உள்பட மத விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி இல்லை, மக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம். விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளில் உள்ள விநாயகர் சிலைகளை தங்களது வீடுகள் அல்லது அருகில் உள்ள நீர் நிலைகளில் தனித் தனியாகச் சென்று கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு, பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்குத் தடை என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கரோனா பரவல் அதிகரிக்காத வகையில், பொது இடங்களில் கூடாமல் விநாயகர் சதுர்த்தி கொண்டாட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 

மேலும் கோயில்களின் முன்வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து நீர்நிலைகளில் கரைப்பார்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி விழாவில் மக்கள் எந்த சமரசமும் இன்றி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com