சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஸ்டாலின்
சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஸ்டாலின்


சென்னை: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீரை அகற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருவான்மியூர் லேட்டிஸ் பாலத்தின் அருகில் பக்கிங்காம் கால்வாயில் மிதக்கும் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின். அவரிடம் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும், இந்திராநகர் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் அருகே பக்கிங்காம் கால்வாயில் ரோபோடிக் எக்ஸ்கவேட்டர் மற்றும் மிதக்கும் ஆம்பிபியன் இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகள் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை, காந்தி மண்டபம் சாலையில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மழைநீரை அகற்றும் வெள்ளத் தடுப்புப் பணிக்காக, சென்னை மாநகராட்சியால் கால்வாய்களில் சேர்ந்துள்ள வண்டல்களை நவீன ஹைட்ராலிக் மற்றும் அதிக உறிஞ்சும் திறன் மற்றும் ஜெட்டிங் வசதி கொண்ட இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com