திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மெகா தடுப்பூசி முகாம்: இதுவரை 10.17 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 10.17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

News image
சென்னை அயனாவரம் நேரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதல்வர் ஆய்வு.
Updated On :26 செப்டம்பர் 2021, 8:31 am

DIN

தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் இதுவரை 10.17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 20,000 இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது. 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகத்துக்கு வந்துள்ள 29 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. 

மெகா தடுப்பூசி முகாமை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையின் பல்வேறு முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வு குறித்துப் பேசினார். 

இதையடுத்து இன்று பிற்பகல் 12.45 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 10.17 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.