சென்னையில் பல்வேறு தடுப்பூசி முகாம்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு (படங்கள்)

மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருவதை அடுத்து சென்னையின் பல்வேறு முகாம்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். 
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதல்வர் ஆய்வு.

தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 20,000 இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது. 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் சாலையில் உள்ள பெத்தேல் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில்  முதல்வர் ஆய்வு
சென்னை அயனாவரம் சாலையில் உள்ள பெத்தேல் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில்  முதல்வர் ஆய்வு

இதற்காக தமிழகத்துக்கு வந்துள்ள 29 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்

மெகா தடுப்பூசி முகாமை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையின் பல்வேறு முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வு குறித்துப் பேசினார். 

அயனாவரம் நேரு திருமண மண்டபத்தில்
அயனாவரம் நேரு திருமண மண்டபத்தில்

சென்னை அயனாவரம் சாலையில் உள்ள பெத்தேல் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். 

ஸ்ட்ராஹான்ஸ் ரோடு சென்னை உயர்நிலைப் பள்ளி
ஸ்ட்ராஹான்ஸ் ரோடு சென்னை உயர்நிலைப் பள்ளி

அதுபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பட்டாளம் தட்சணாமூர்த்தி திருமண மண்டபம், ஸ்ட்ராஹான்ஸ் ரோடு சென்னை உயர்நிலைப் பள்ளி, அயனாவரம் நேரு திருமண மண்டபம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 

பட்டாளம் தட்சணாமூர்த்தி திருமண மண்டபம்
பட்டாளம் தட்சணாமூர்த்தி திருமண மண்டபம்

இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com