தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டது ஏன்?: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
தமிழ்நாடு அரசுதான் குறைவாக உயர்த்தியுள்ளது என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசுதான் குறைவாக உயர்த்தியுள்ளது என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயா்வானது (2022-2023) உடனடியாக அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சம் 150 சதவீதம் வரை சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வுக்கு கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, இந்தியா முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசுதான் குறைவாக உயர்த்தியுள்ளது.
சென்னையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வரி உயர்த்தப்பட்டுள்ளது. 31ஆம் தேதிக்குள் சொத்து வரி உயர்த்தாவிட்டால் இந்த ஆண்டு உள்ளாட்சி அமைப்புக்கான நிதி தரப்படாது என மத்திய அரசு கூறிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...