டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

10 ஆண்டுகளில் செய்யாததை 10 மாதங்களில் செய்திருக்கிறோம்: மு.க. ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு அரசுக் கட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

News image
புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம்
Updated On :5 ஏப்ரல் 2022, 9:31 am

DIN


சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு அரசுக் கட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 

சமத்துவபுரங்களை சீரமைப்பது என்பது பிற்போக்குத்தனங்களில் தேங்கி நிற்பதை சீரமைப்பதாகும்.  மக்களோடு நெருக்கமாக இருக்கும் துறை உள்ளாட்சி துறைதான்.  அதிமுக ஆட்சிக் காலத்தில் சமத்துவபுரங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்தக் குறையும் இல்லை என்று மக்கள் கூறுகிறார்கள். அதிமுகவினர் 10 ஆண்டுகளில் செய்யாததை 10 மாதத்தில் செய்திருக்கிறோம். 

பெரியார் இல்லையென்றால் நாமும் இல்லை, தமிழகத்தில் முன்னேற்றமும் இல்லை என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.