
கோவை: கடந்த 9 நாள்களில் 3-வது யானை பலியாகியுள்ளது.
பில்லூர் அணை அருகே உள்ள வனப்பகுதியில் யானையின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.
வனத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், சடலத்தைக் கண்டதாகவும், அந்த யானைக்கு 20 வயது இருக்கும் என தெரிவித்தனர்.
நாளை நடத்தப்படும் பிரேதப் பரிசோதனையில், இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒன்பது நாள்களுக்கு முன்பு 2 யானைகள் உயிரிழந்த நிலையில் இன்று 3-வது யானை பலியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.