டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சரக்குகள் கையாள்வதில் சென்னைத் துறைமுகம் சாதனை

ஒரே நாளில் 23,220 மெட்ரிக் டன் ராக் பாஸ்பேட் என்ற கனிமப் பொருளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் சாதனை படைத்தது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 9:52 pm

DIN

ஒரே நாளில் 23,220 மெட்ரிக் டன் ராக் பாஸ்பேட் என்ற கனிமப் பொருளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் சாதனை படைத்தது.

இதுகுறித்து சென்னைத் துறைமுகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த வியாழக்கிழமை எம்.வி. ஐவிஎஸ் ரஃப்பேல் என்ற கப்பல் சென்னைத் துறைமுகம் வந்தது. இக்கப்பலிலிருந்து ஒரே நாளில் (24 மணி நேரத்தில்) 23,220 மெட்ரிக் டன் ராக் பாஸ்பேட் என்ற கனிம பொருள் இறக்கப்பட்டது. ஒரே நாளில் இவ்வகை சரக்குகள் கையாளப்பட்டதில் இது அதிகபட்ச அளவாகும். இதற்கு முன்பு 2018 ஆண்டில் மாா்ச் 4, இ ல் எம்.வி. பல்க்டெக் என்ற என்ற கப்பலில் கையாளப்பட்ட 21,050 மெட்ரிக் டன் ராக் பாஸ்பேட் கையாண்டதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

இந்த சாதனையை எட்டுவதற்கு காரணமாக இருந்த கப்பலின் முகவா், ஏற்றுமதியாளா், போக்குவரத்து நிறுவனம் மற்றும் துறைமுக அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோரை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்தாா் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.