சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயிலில் நடந்த கம்பம் ஆடும் விழாவில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்பத்தை சுற்றிவந்து ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய நடனம் ஆடினர்.
சத்தியமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் விழா கடந்த 6 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி, கோவில் முன் மிகப் பிரம்மாண்டமாக நடப்பட்ட கம்பத்துக்கு பெண்கள் நாள்தோறும் புனித நீர் ஊற்றி மஞ்சள் பூசி வழிபட்டனர். கோயிலில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
இரவுநேரத்தில் பாரம்பரிய நிகழ்ச்சியான கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சுற்றி இளைஞர்கள் கம்பம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு கம்பத்தாட்டம் ஆடினர். மத்தாள இசைக்கேற்ப இளைஞர் சலக்கை கட்டி ஆடினர். கம்பத்தை சுற்றி வந்து ஆடும் இளைஞர்களின் கம்பத்தாட்டம் பெண்களை மிகவும் கவர்ந்தது.
மத்தாள இசை இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகளுக்கும் ஆசை ஏற்படுத்தியது. குழந்தைகளும் கம்பத்தாட்டம் ஆடி மகிழ்ந்தனர். இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த கம்பம் ஆட்டம் நள்ளிரவு 2 மணி நீடித்தது. இளைஞர்களின் கம்பத்தாண்டம் வரும் புதன்கிழமை வரை நாள்தோறும் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


