மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கம்பத்தில் சரக்கு ஏற்றும் ஆட்டோ வாகனங்கள் வேலை நிறுத்தம்

தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து சரக்கு ஏற்றும் ஆட்டோ வாகனங்கள் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  செய்தனர்.

News image
கம்பம்
Updated On :11 ஏப்ரல் 2022, 9:54 am

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து சரக்கு ஏற்றும் ஆட்டோ வாகனங்கள் திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்  செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் கர்னல் ஜான் பென்னிகுயிக் சரக்கு ஏற்றும் ஆட்டோ தொழிலாளர் மற்றும் உரிமையாளர் சங்கம் உள்ளது.

இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன, மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து திங்கள்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கம்பத்தில் சரக்கு ஏற்றும் வாகனங்கள் முழுவதும் இயங்கவில்லை, வாரச்சந்தை அருகே  அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 சங்க தலைவர் செல்வ பிரபு கூறியது, 

மத்திய அரசின் எரிபொருள் விலை உயர்வு எங்களை மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது, பொதுமக்களிடம் அதிக வாடகை பெறமுடியவில்லை. நிதி நிறுவனங்களுக்கு தவணை செலுத்த முடியவில்லை,  எனவே எங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.