பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தென்மேற்கு மலைத்தொடரில் பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

Published On :


கம்பம்: தென்மேற்கு மலைத்தொடரில் பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையில் கடும் கோடையாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்தும், நீர்வரத்து குறைந்தும் இருந்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஏப்ரல் 9 முதல் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 350 கன அடியாக இருந்தது.

ஏப்.10ஆம் தேதி விநாடிக்கு 850 கன அடியாக அதிகரித்து வந்தது. அதனை தொடர்ந்து மழை பெய்வதால் செவ்வாய்க்கிழமை வினாடிக்கு, 1,975 கன அடியாக வந்தது.  இதன்படி, ஒரே நாளில் நீர்வரத்து 1,125 கன அடி தண்ணீர் அதிகமாக வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அணை நிலவரம்

செவ்வாய்க்கிழமை பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.50 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 142), நீர் இருப்பு 3,942 கன அடியாகவும் அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 1,975 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் விநாடிக்கு 100 கன அடியாகவும் இருந்தது. பெரியாறு அணைப்பகுதியில் 35.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 44.60 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.